/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 லட்சம் பட்டா பிரச்னைக்கு தீர்வு அமைச்சர் உதயநிதி உறுதிமொழி
/
2 லட்சம் பட்டா பிரச்னைக்கு தீர்வு அமைச்சர் உதயநிதி உறுதிமொழி
2 லட்சம் பட்டா பிரச்னைக்கு தீர்வு அமைச்சர் உதயநிதி உறுதிமொழி
2 லட்சம் பட்டா பிரச்னைக்கு தீர்வு அமைச்சர் உதயநிதி உறுதிமொழி
ADDED : பிப் 13, 2024 12:29 AM

சென்னை, ''சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு லட்சம் குடும்பங்களின் பட்டா பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் உதயநிதி உறுதி அளித்தார்.
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு, பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அமைச்சர் உதயநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், அவர் பேசியதாவது:
நம் அரசு அமைந்த பின், ஏற்கனவே வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு, இரண்டு லட்சம் இ - பட்டாக்களை வழங்கி உள்ளோம். 60,000 குடும்பங்களுக்கு காலிமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நத்தம் நில பட்டாக்கள், கணினியில் ஏறாமல் இருந்தன. மொத்தம் 300 வருவாய் தாலுகாக்களில், 1.40 கோடி நத்தம் பட்டாக்கள் உள்ளன. இதில், 121 வருவாய் தாலுகாக்களில் இணைய வழியில் பட்டா மாறுதலை செய்து முடித்துள்ளோம். மீதியுள்ள வருவாய் தாலுகாக்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இணையத்தில் ஏற்றி முடிக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா பிரச்னைக்கு இரண்டு லட்சம் குடும்பங்கள் தீர்வு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இது பல துறைகள் தொடர்புடையதாக உள்ளதால், இதை சிறப்பு திட்டமாக கருதி, சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, அறிக்கை தயார் செய்து தர முதல்வர் அறிவுறுத்தினார்.
நீண்ட கால இப்பிரச்னைக்கு தீர்வு காண, இந்த கூட்டம் துவக்கப் புள்ளியாக இருக்கும். அவர்களுக்கு நில உரிமை மற்றும் வாழ்விட உரிமையை உறுதி செய்யும் வகையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்ந்து செயல்படும்.
தமிழக வீட்டு வசதி வாரியத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 4,000த்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, கடந்த அக்டோபர் மாதம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், முத்துசாமி, அன்பரசன், சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.எல்.ஏ.,க்கள், அரசு துறை செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.