/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிலமெடுப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு அறிவுரை
/
நிலமெடுப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு அறிவுரை
நிலமெடுப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு அறிவுரை
நிலமெடுப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு அறிவுரை
ADDED : நவ 23, 2024 12:24 AM

சென்னை
''நெடுஞ்சாலைத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலம் எடுப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு, அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரில் நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 50 கோடி ரூபாய்க்குமேல் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் வேலு தலைமையில், நேற்று கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடந்தது.
மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, சாலை மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாயை கடப்பதற்கான பாலங்கள் தேவை.
இவற்றில் சில பணிகளை, நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதில், நிலம் எடுப்புப் பணிகளும் அடங்கும். இதில், 50 கோடி ரூபாய்கு மேலுள்ள, 16 பணிகளின் மொத்த மதிப்பு, 2,375 கோடி ரூபாய்.
இதில், 11 பணிகளில் நிலமெடுப்பு துவங்கப்பட்டு உள்ளன. பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்.
எனவே, வருவாய்த் துறை மற்றும் நில எடுப்பு அதிகாரிகளின் உதவியுடன், நிலம் எடுப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலு உத்தரவிட்டார்.
மேலும், 'பெருங்களத்துார் ரயில்வே பாலம் கட்டுவதில் மீதமுள்ள பணிகளை, வனத் துறை, மின் வாரியத்திடம் அனுமதி பெற்று துவங்க வேண்டும். தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள், கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்தும் பணிகளை, வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்.
'மத்திய கைலாஷ் சந்திப்பில் உள்ள பல்வழிச் சாலை மேம்பாலத்தை, அடுத்த ஆண்டு மே இறுதிக்குள் முடிக்க வேண்டும். பாடி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தை, அடுத்தாண்டு டிச., இறுக்குள் முடிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட, காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, தரமுடன் செயல்படுத்த வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.