/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதி: கோவில் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம்
/
'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதி: கோவில் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம்
'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதி: கோவில் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம்
'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதி: கோவில் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம்
ADDED : ஜன 14, 2024 02:40 AM
வியாசர்பாடி, மிக்ஜாம்' புயல் வெள்ள நிவாரண நிதிக்கு, கோவில் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர்.திருக்கோயிலில் பணியாளர்களுக்குபொங்கல் கருணைக்கொடை 3,000 ரூபாயை தொடர்ந்து இந்த ஆண்டும் வழங்கியதற்காகவும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.மேலும் திருக்கோவில் பணியாளரின் நீண்ட நாள் கோரிக்கைகளான திருக்கோவில் பணியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்குவது, பணியாளர் குடியிருப்பு, ஆணையர் அலுவலகத்தில் சங்கத்திற்கு என தனி அலுவலகம், தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை, ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினர்.மேலும், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக திருக்கோவில் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து வழங்கிட மனு வழங்கினர்.இந்த சந்திப்பின் போது உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முத்துசாமி, கே.ஆர்.பாலசுந்தரம், சென்னை கோட்ட தலைவர் தனசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

