/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாயமான சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
மாயமான சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : மே 06, 2025 11:37 PM
பூந்தமல்லி,பூந்தமல்லி, முல்லா தோட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். அவரது மனைவி அனுசியா. அவர்களது நான்கு வயது மகன் ஆதிரன்.
நேற்று காலை, கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், மகன் ஆதிரன் மட்டும் வீட்டில் இருந்தான். நேற்று மதியம், விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, திடீரென காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார், காணாமல் போன சிறுவனை தேடினர். இதற்கிடையில், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் விஜயா என்பவர், பூந்தமல்லி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, சிறுவன் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் தெரிவித்தார்.
போலீசாரும், சிறுவனின் பெற்றோரும் மருத்துவமனை சென்றனர். அப்போது, சிறுவனை அவரது பெற்றோரிடம் மருத்துவமனை ஊழியரிடம் ஒப்படைத்தனர்.
சாலையில் வழி தெரியாமல் நின்ற சிறுவனை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, மருத்துவமனை ஊழியர்களிடம் ஒப்படைத்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.