ADDED : ஏப் 14, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கானத்துார்:வண்டலுாரை சேர்ந்தவர் செல்வம், 30. மனைவி பிரியா, 27. இவர்களது 5 வயது மகள் கனிஷ்கா.
நேற்று, மூன்று பேரும் நீலாங்கரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு. அக்கரை கடற்கரைக்கு சென்றனர்.
மணலில் விளையாடி கொண்டிருந்த கனிஷ்கா திடீரென மாயமானார். போலீசார், ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு வெளியிட்டனர். பெற்றோரும், கடற்கரைக்கு சென்ற சிலரும் சிறுமியை தேடினர். இரண்டு மணி நேரத்துக்கு பின் பனையூர் கடற்கரையில் விளையாடிய சிறுமியை அங்குள்ள மக்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். பின் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அக்கரையில் விளையாடிய சிறுமி, 2.5 கி.மீ., பனையூருக்கு எப்படி சென்றார் என, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

