/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
60 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு எம்.எம்.சி., மாணவர்கள் குதுாகலம்
/
60 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு எம்.எம்.சி., மாணவர்கள் குதுாகலம்
60 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு எம்.எம்.சி., மாணவர்கள் குதுாகலம்
60 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு எம்.எம்.சி., மாணவர்கள் குதுாகலம்
ADDED : ஜன 24, 2025 12:12 AM

சென்னை, சென்னை மருத்துவக் கல்லுாரியில், 1965 - 71ம் ஆண்டுகளில், எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவ மாணவர்கள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், 60ம் ஆண்டு வைர விழா சந்திப்பை நேற்று நடத்தினர்.
இந்த சந்திப்பை, டாக்டர்கள் ஜெயவேலன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, லண்டன், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், 48 பேர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று, பழைய நினைவுகளை அசை போட்டனர்.
தொடர்ந்து கேக்வெட்டியும், ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும், அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து, முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:
இந்தியாவின் பழம்பெரும் இரண்டாவது மருத்துவ கல்லுாரியில், பல நிபுணர்கள் உருவாகி உள்ளனர்.
எங்கள் நீண்டகால கோரிக்கையாக, சென்னை மருத்துவ கல்லுாரியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.