/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி ஹேண்ட்பால் போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணா முதலிடம்
/
கல்லுாரி ஹேண்ட்பால் போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணா முதலிடம்
கல்லுாரி ஹேண்ட்பால் போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணா முதலிடம்
கல்லுாரி ஹேண்ட்பால் போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணா முதலிடம்
ADDED : மார் 22, 2025 12:11 AM

சென்னை, கல்லுாரிகளுக்கு இடையிலான ஹேண்ட்பால் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி முதலிடத்தை பிடித்தது.
நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான ஹேண்ட்பால் போட்டி, செம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், 19, 20ம் தேதிகளில் நடந்தது.
போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா, எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி, 10 - 6 என்ற கணக்கில் எஸ்.டி.என்.பி., கல்லுாரியையும், 16 - 8 என்ற கணக்கில், எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரியையும் வீழ்த்தின.
அனைத்து போட்டிகள் முடிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி முதலிடத்தையும், எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி அணி இரண்டாம் இடத்தையும், எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.