ADDED : மார் 20, 2025 12:11 AM
பெரம்பூர், பெரம்பூர், மார்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 29 இவர் வீட்டருகே உள்ள பாத்திர கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நண்பர்களுடன் தங்கியுள்ள இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டுக்கு வந்தவர் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்த போது தனது மற்றும் நண்பர்கள் என, ஐந்து மொபைல் போன்கள் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் அளித்தார்.
போலீசார், பெரம்பூர், வீனஸ்மார்கெட் பகுதியை சேர்ந்த யுவராஜ், 21 என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் பிரவீன்குமார் தங்கியிருந்த வீடு மட்டுமின்றி, சோமராமசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்தும் மொபைல்போன் திருடியுள்ளார். அவரிடமிருந்து ஆறு மொபைல்போன்கள் மீட்கப்பட்டன. இவர் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகளும் உள்ளன.