/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் திருடியவரை வெந்நீர் ஊற்றி சித்ரவதை
/
மொபைல் போன் திருடியவரை வெந்நீர் ஊற்றி சித்ரவதை
ADDED : மார் 01, 2024 12:30 AM

தண்டையார்பேட்டை,
கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ், 28, இவரது 'ஏசி' பழுது நீக்கும் கடையில் மொபைல் போன் மாயமானது.
கடையில் பொருத்தியிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை பார்த்ததில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த தனசேகர், 29, என்பவர் மொபைல் போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
கடையில் வேலை பார்ப்பவர்கள், தனசேகரனை பிடித்து வந்து, வெந்நீரை முதுகில் ஊற்றியும், வெல்டிங் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். காயமடைந்த தனசேகரன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, கடை ஊழியர்கள் பரணிதரன், 21, பயாஸ் அகமது, 20, மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். தனசேகர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

