/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாட்பட்ட நரம்புசார் வலி பாதிப்புகளுக்கு உணர்வு செல்களை தடுக்கும் நவீன கருவி
/
நாட்பட்ட நரம்புசார் வலி பாதிப்புகளுக்கு உணர்வு செல்களை தடுக்கும் நவீன கருவி
நாட்பட்ட நரம்புசார் வலி பாதிப்புகளுக்கு உணர்வு செல்களை தடுக்கும் நவீன கருவி
நாட்பட்ட நரம்புசார் வலி பாதிப்புகளுக்கு உணர்வு செல்களை தடுக்கும் நவீன கருவி
ADDED : நவ 21, 2024 12:19 AM

சென்னை,
நாட்பட்ட நரம்புசார் பாதிப்புகளை தடுக்க, மூளைக்கு வலி உணர்வுகளை கடத்தும் செல்களை, தடுத்து நிறுத்தும் நவீன கருவியை பொருத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மற்றும் வலி நிவாரண சிகிச்சை நிபுணர்கள் ஆனந்த் முருகேசன், அப்பாஜி கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:
முதுகு தண்டுவடத்துக்கு கீழே, நரம்பணுத் திரள் வேர் என்ற பகுதி உள்ளது. அங்கிருந்து தான் நரம்பு சார்ந்த வலி உணர்வுகள் கடத்தப்படும்.
இதற்கு முன், வலி நிவாரணத்துக்கு பக்கவிளைகள் உடைய மாத்திரைகள், நரம்பு தணிப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது, 'ஸ்பெனல் கார்ட் ஸ்டிமுலேட்டர்' என்ற தண்டுவட முடுக்கி சாதனம், நிரந்தர தீர்வு காணும் நுட்பம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, நரம்பணுத் திரள் வேர் பகுதியில் சிறிய ஊசி வாயிலாக, 'எலக்ட்ரோட்ஸ்' என்ற மின்னுாட்ட கம்பித் தடம் பொருத்தப்படுகிறது.
அந்த எலக்ட்ரோட்ஷஸ், இடுப்பு பகுதிக்கு உள்ளே சிறுதுளையிட்டு பொருத்தப்பட்டு, ஒரு பேட்டரி சாதனத்துடன் இணைக்கப்படும். இந்த கருவி வாயிலாக மின் அதிர்வுகள் உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கு செலுத்தப்படும்.
வெளியில் இருந்து, 'ரிமோட்' வாயிலாக அதிர்வுகளை உருவாக்கி, வலி உணர்வு கடத்தப்படுவதை தடுத்து, நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.
புற்றுநோயாளிகளுக்கும், நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்டோருக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த இவை, சிறு மாற்றம் செய்து நரம்பு சார்ந்த பாதிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை நோயால் பாதம், கை நரம்பு வலியால் அவதிப்படுவோருக்கு இம்முறை பலனளிக்கும். ஓமன் நாட்டை சேர்ந்த, 30 வயது நபர், இதன் வாயிலாக பலனடைந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

