/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்மஞ்சேரி, கண்ணகி நகரில் நவீன எல்.இ.டி., விளக்குகள்
/
செம்மஞ்சேரி, கண்ணகி நகரில் நவீன எல்.இ.டி., விளக்குகள்
செம்மஞ்சேரி, கண்ணகி நகரில் நவீன எல்.இ.டி., விளக்குகள்
செம்மஞ்சேரி, கண்ணகி நகரில் நவீன எல்.இ.டி., விளக்குகள்
ADDED : மே 19, 2025 01:24 AM
கண்ணகி நகர்:சோழிங்கநல்லுார் மண்டலம், 195, 196வது வார்டில், கண்ணகி நகர், எழில் நகர் வாரிய குடியிருப்புகளில், 24,703 வீடுகள் உள்ளன.
இங்கு, 90 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றால் வெளிச்சம் குறைவாக இருப்பதால், அதிக திறன் கொண்ட விளக்குகள் அமைக்க வேண்டும் எனக்கூறி, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 183 தெரு விளக்குகளை, 150 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி.,யாக மாற்ற, மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, 96.38 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 200வது வார்டு, செம்மஞ்சேரி வாரிய குடியிருப்பில், 75 எல்.இ.டி., விளக்குகள் மற்றும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பூங்காவில், 20 எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கு, 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம், விளக்குகள் அமைக்கும் பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.