/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓமந்துாரார் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை
/
ஓமந்துாரார் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை
ஓமந்துாரார் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை
ஓமந்துாரார் மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை
ADDED : ஜன 25, 2025 12:35 AM
சென்னை, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 6.60 கோடி ரூபாய் மதிப்பில், நவீன எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
மருத்துவமனையில், 6.60 கோடி ரூபாய் செலவில், 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவி, நோயாளிகளின் தலை முதல் கால் வரை இமேஜிங் செய்யலாம்.
செயற்கை நுண்ணறிவு வாயிலாக, இக்கருவியை கொண்டு துரிதமாக ஸ்கேன் செய்வதால், குறைந்த நேரத்தில் அதிக நோயாளிகளை பரிசோதிக்க முடியும். இதனால், நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.