/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரின் செவித்திறன் பாதுகாக்க நவீன கருவி
/
போலீசாரின் செவித்திறன் பாதுகாக்க நவீன கருவி
ADDED : டிச 28, 2024 01:54 AM

சென்னை:சென்னை போக்குவரத்து போலீசார் பலருக்கு, ஒலி மாசால் செவித்திறன் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
இதை தடுக்கும் விதமாக, பிரத்யேக கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 'ஆஸ்ட்ரா ஹியரிங் கேர்' எனும் நவீன கருவியை, கூடுதல் கமிஷனர் சுதாகர் நேற்று போலீசாருக்கு வழங்கினார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் தினசரி, எட்டு மணி நேரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வாகன போக்குவரத்தால் ஏற்படும் இடைவிடாத சத்தமானது, போலீசாரின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.
இதை தடுக்கும் விதமாக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன கருவிகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த, 20 போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நவீன கருவி, 25 சதவீதம் இரைச்சல் சத்தத்தை குறைக்கிறது. நாட்டிலே முதன் முறையாக சென்னை காவல் துறையில் போக்குவரத்து போலீசாரின் செவித்திறனை பாதுகாக்கும் விதமாக நவீன கருவி வழங்கி இருப்பது பெருமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

