/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோகன் மதுபான நிறுவனம் அகற்றம் * 248 ஏக்கர் நிலம் மீட்பு
/
மோகன் மதுபான நிறுவனம் அகற்றம் * 248 ஏக்கர் நிலம் மீட்பு
மோகன் மதுபான நிறுவனம் அகற்றம் * 248 ஏக்கர் நிலம் மீட்பு
மோகன் மதுபான நிறுவனம் அகற்றம் * 248 ஏக்கர் நிலம் மீட்பு
ADDED : ஏப் 10, 2025 11:51 PM

சென்னை, சென்னை, வளசரவாக்கம், மதுரவாயல் பகுதிகளில், 'மோகன் ப்ரூவரீஸ் அண்ட் டிஸ்டில்லரீஸ்' என்ற மதுபான நிறுவனத்துக்கு சொந்தமான, 248 ஏக்கர் நிலத்தை, கடந்த, 1975ம் ஆண்டு கையகப்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலம், புது ராமாபுரம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுவதற்காக வீட்டு வசதி வாரியம் வசம் ஒப்படைக்கப்பட்டது. நிலத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மோகன் மதுபான நிறுவனம், 2017 ல் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், 'மோகன் மதுபான நிறுவனம், இந்த நிலத்தில் செயல்படுவது சட்ட விரோதம். எனவே, உரிய அனுமதி பெற்று, ஆக்கிரமிப்பாளரை அரசு அப்புறப்படுத்திவிட்டு, அந்த நிலத்தை பொதுபயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து, வரும், 21ம் தேதிக்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த மோகன் மதுபான நிறுவனத்தை, அதிகாரிகள் நேற்று அகற்றினர். மேலும், 'இந்த இடம் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது; மீறி ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பதாகைளும் வைக்கப்பட்டுள்ளது.

