/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருவமழை ஓய்ந்தும் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு
/
பருவமழை ஓய்ந்தும் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு
பருவமழை ஓய்ந்தும் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு
பருவமழை ஓய்ந்தும் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு
ADDED : டிச 10, 2025 05:18 AM
சென்னை: வங்க கடலில் உருவான, 'டிட்வா' புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், ஏரிகளின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டது. மழை ஓய்ந்த நிலையில், நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருந்தது.
நீர்பிடிப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர், ஏரிகளுக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
இதனால், சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பியுள்ளன. அவற்றில் இருந்து உபரிநீர் திறப்பை, நீர்வளத்துறை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பூண்டி ஏரி முழு கொள்ளளவு நிரம்பியுள்ளதால், அதில் இருந்து வினாடிக்கு, 300 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. இணைப்பு கால்வாய் வாயிலாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு, 700 கனஅடி தி றக்கப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 184 கனஅடி நீர் பம்பிங் செய்து எடுக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

