/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக்கில் மகனுடன் சென்ற தாய் தவறி விழுந்து பலி
/
பைக்கில் மகனுடன் சென்ற தாய் தவறி விழுந்து பலி
ADDED : செப் 23, 2025 01:17 AM
பல்லாவரம்:மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், தவறி விழுந்து பலியானார்.
கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்தவர் சுமதி, 50. இவரது மகன் சந்தோஷ்குமார், 26. தங்கையின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக, நேற்று முன்தினம் மாலை, இருவரும் 'ஹீரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், பொழிச்சலுாருக்கு சென்றனர்.
அங்கு அழைப்பிதழ் வைத்துவிட்டு, இருவரும் திரும்பினர். பொழிச்சலுார், வெங்கடேஸ்வரா நகர், மூன்றாவது தெருவில் வேகத்தடை மீது வேகமாக வாகனம் ஏறி, இறங்கிய போது, பின்னால் அமர்ந்திருந்த சுமதி, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சுமதியை அழைத்து சென்றனர்.
ஆனால், வழியிலேயே சுமதி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.