/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
14 வயது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய தாய்
/
14 வயது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய தாய்
14 வயது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய தாய்
14 வயது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய தாய்
ADDED : நவ 17, 2025 03:23 AM
எம்.கே.பி.நகர்: கொடுங்கையூரில் 14 வயது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை, போலீசாரின் உதவியுடன் தாய் தடுத்து நிறுத்தினார்.
கொடுங்கையூரைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தாய் மலர், தந்தை ராஜா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார்.
ராஜா தன் 14 வயது மகளுக்கும், இரண்டாவது மனைவி சங்கீதாவின் உறவினரான முருகன் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தார். தகவலறிந்த அவரது தாய் மலர், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
சென் னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு நல அலுவலர் சங்கீதா தலைமையில், சமூக நலத்துறை இளம் பெண்கள் பாதுகாப்பு துறையினர் 10க்கும் மேற்பட்டோர், சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்தனர்.
இரு குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தி, சிறுமிக்கு 14 வயது என்பதால் திருமணம் செல்லாது என ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து, சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 18 வயதுக்கு பின், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென, ராஜாவுக்கு அறிவுரை வழங்கி சென்றனர்.

