/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் மீண்டும் பள்ளம் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் மீண்டும் பள்ளம் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் மீண்டும் பள்ளம் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் மீண்டும் பள்ளம் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 15, 2025 12:25 AM

விருகம்பாக்கம், விருகம்பாக்கம் தாங்கல் தெரு, கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு மற்றும் விருகம்பாக்கம், நெற்குன்றத்தை இணைக்கும் சாலையாக உள்ளது.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்து செல்லும் வாகனங்னங்கள், தாங்கல் தெரு வழியாக காளியம்மன் கோவில் தெரு சென்று, கோயம்பேடு செல்வது வாடிக்கை.
தாங்கல் தெரு மற்றும் காளியம்மன் கோவில் சந்திப்பில், சில மாதங்களுக்கு முன், 20 அடி ஆழத்தில் செல்லும் கழிவுநீர் குழாய் உடைந்து, சாலை உள்வாங்கி, மெகா பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் வாரிய அதிகாரிகள், குழாயை சரி செய்து, மண் கொட்டி பள்ளத்தை மூடி, சாலையை சீரமைத்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில், அதே பகுதியில், மீண்டும் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, குளம்போல் மாறியுள்ளது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் சாலையை சீர் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
***