/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொலைபேசி பெட்டியால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
தொலைபேசி பெட்டியால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 24, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி டிரங்க் சாலையில், கரையான்சாவடி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு சாலையோரம், பி.எஸ்.என்.எல்., தொலைபேசி வடங்களை இணைக்கும் பெட்டி உள்ளது. இந்த பெட்டி பழுதடைந்து, தற்போது பயன்பாடின்றி உள்ளது.
மேலும், சாலையில் எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், அங்கு பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
அசம்பாவிதம் ஏதேனும் நடைபெறும் முன், இடையூறாக உள்ள இந்த தொலைபேசி இணைப்பு பெட்டியை அகற்ற வேண்டும்.-
- என்.சுனில்குமார், பூந்தமல்லி

