/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாங்குழியான துரைசாமி சுரங்கப்பாதை கடும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்
/
பல்லாங்குழியான துரைசாமி சுரங்கப்பாதை கடும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்
பல்லாங்குழியான துரைசாமி சுரங்கப்பாதை கடும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்
பல்லாங்குழியான துரைசாமி சுரங்கப்பாதை கடும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : டிச 27, 2024 12:35 AM

தி.நகர், தி.நகர், துரைசாமி சுரங்கப் பாதையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
தி.நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகர பேருந்துகள், இந்த குறுகலான சுரங்கப்பாதை வழியாகத்தான் சென்று வருகின்றன.
மழைக்காலத்தில், இந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவது வழக்கம். சமீபத்தில் பெய்த மழையின்போது, சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டன.
மேலும், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து கசியும் நீர், இப்பள்ளங்களில் தேங்கின.
இதையடுத்து, சமீபத்தில் மூன்று முறை மாநகராட்சி சார்பில், சுரங்கப்பாதையின் மையப் பகுதியில் சாலையை சுரண்டாமல் தார் ஊற்றி சாலை சீரமைக்கப்பட்டது.
தொடர் மழை மற்றும் சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து கசியும் நீரால், அவசர கதியில் போடப்பட்ட சாலை அடிக்கடி சேதமடைகிறது.
தற்போது போடப்பட்ட தார் சாலையும் பெயர்ந்து, சுரங்கப் பாதையின் மையப்பகுதி பல்லாங்குழியாக மாறியுள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்து ஏற்படுகிறது.
மேலும், பள்ளத்தில் விழாமல் இருக்க, வாகனங்கள் மெதுவாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினந்தோறும், 'பீக் ஹவர்' நேரங்களில், மேற்கு மாம்பலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பிருந்தாவன் தெருவிலும்; தி.நகரில் இருந்து வரும் வாகனங்கள் துரைசாமி சாலையிலும் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால், காலையில் பணிக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு மாநகராட்சி அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.