/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோராஞ்சேரி சாலையில் வாகன ஓட்டிகள் பீதி
/
சோராஞ்சேரி சாலையில் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : ஜூலை 17, 2025 12:25 AM

சோராஞ்சேரி, ஆவடி பருத்திப்பட்டு - சோராஞ்சேரி பிரதான சாலை 8 கி.மீ., துாரம் உடையது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையின் பல இடங்கள், மின் விளக்கின்றி இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது.
குறிப்பாக, ஆயில்சேரி ஜங்ஷன் முதல் மேட்டுப்பாளையம் வரை 2 கி.மீ., துாரத்துக்கு, மின் விளக்கு இல்லாமல் கும்மிருட்டாக உள்ளது.
இதனால், இரவு வேளைகளில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் 'பீதி'யுடன் சென்று வருகின்றனர். சாலையின் இருபுறமும் புதர்மண்டி காட்சியளிப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் சர்வ சாதாரணமாக சாலையில் உலா வருகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட கண்ணப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.