/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொரட்டூர் சுரங்கப்பாதையில் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
/
கொரட்டூர் சுரங்கப்பாதையில் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
கொரட்டூர் சுரங்கப்பாதையில் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
கொரட்டூர் சுரங்கப்பாதையில் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 28, 2024 12:32 AM
கொரட்டூர்,
கொரட்டூர் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக, ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 24 கோடி ரூபாய் மதிப்பில், கொரட்டூர் சுரங்கப்பாதை கட்டப்பட்டு, 2020ல் பயன்பாட்டிற்கு வந்தது.
இதனால், தண்டவாளங்களில் நடந்து செல்வதால் ஏற்படும் ரயில் விபத்துகள் குறைந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பயனடைந்தனர்.
இந்நிலையில், சுரங்கப்பாதை வளைவில் அமைக்கப்பட்ட 'கான்கிரீட்' சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சறுக்கி விழுந்து காயம் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண, கடந்த ஆண்டு,'கான்கிரீட்' சாலை, மில்லிங் செய்யப்பட்டது. இதனால் விபத்துக்கள் குறைந்துள்ளன.
ஆனால், கால்வாய் இருந்த பகுதியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டதால், நீர் கசிவை தடுக்க முடியவில்லை.
இதனால் நேற்று ஒரே நாளில், பெண்கள், குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், சுரங்கப்பாதையில் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
எனவே, விபத்து ஏற்படாமல் தடுக்க, சுரங்கப்பாதை வளைவு சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.