/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெட்ரோ' பணியிலிருந்த கிரேன் திடீர் பழுது நுங்கம்பாக்கத்தில் திணறிய வாகன ஓட்டிகள்
/
'மெட்ரோ' பணியிலிருந்த கிரேன் திடீர் பழுது நுங்கம்பாக்கத்தில் திணறிய வாகன ஓட்டிகள்
'மெட்ரோ' பணியிலிருந்த கிரேன் திடீர் பழுது நுங்கம்பாக்கத்தில் திணறிய வாகன ஓட்டிகள்
'மெட்ரோ' பணியிலிருந்த கிரேன் திடீர் பழுது நுங்கம்பாக்கத்தில் திணறிய வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 23, 2025 12:10 AM

சென்னை :மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் திடீரென பழுதானதால், நுங்கம்பாக்கத்தில், போக்கு வரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 116 கி.மீ., பணிகள், மூன்று வழித்தடங்களில் நடந்து வருகின்றன.
இவற்றில், மாதவரம் -- சிறுசேரி சிப்காட் வரையிலான, 45.4 கி.மீ., பணியில், 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 மேம்பால மெட்ரோ நிலையங்களும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான, 12 கி.மீ., சுரங்கப்பாதை கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பணியில், சுரங்கம் தோண்டும் எட்டு இயந்திரங்களும், ராட்சத கிரேன்களும் பயன்பாட்டில் உள்ளன.
இதற்கிடையே, நுங்கம்பாக்கம் தெரேசா சர்ச் அருகில், மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்ட ராட்சத கிரேனில், நேற்று காலை திடீரென பழுது ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப பணியாளர்கள், இரண்டு மணி நேரமாக பணி செய்து, பழுதை சரி செய்தனர்.
இதனால், உத்தமர் காந்தி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, மெட்ரோ பணியாளர்கள் சிலர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கிரேன், அருகில் உள்ள பணியை மேற்கொள்ள கொண்டு செல்லும்போது திடீரென பழுதானது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணி நடக்கும் இடத்திலேயே கிரேன் பழுதாகி இருந்தால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.