/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறு பாலம் அருகே பள்ளம் தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
சிறு பாலம் அருகே பள்ளம் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 13, 2025 12:11 AM

ஆவடி அடுத்த பட்டாபிராம், இந்து கல்லுாரி பகுதியில், கோபாலபுரம் பிரதான சாலை உள்ளது. பட்டாபிராம், தண்டரை வழியாக சேக்காடு, ஆவடி செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சேக்காடு துணை மின் வாரிய நிலையத்தை ஒட்டியுள்ள 150 மீட்டர் சாலையில், ஆறு மாதங்களுக்கு முன் 100 மீட்டர் சிமென்ட் சாலை போடப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டு இருந்த பாதாளச் சாக்கடை மூடிகள் பெயர்ந்து, ஆபத்தான வகையில் காட்சியளிக்கிறது.
அதேபோல, அண்ணா நகரில் இருந்து வெளியேறும் மழைநீர், சேக்காடு ஏரியை சென்றடைய சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி சாலையோரத்தில், ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையின் தரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
தடுப்பு இல்லாததால், இரவு வேளைகளில் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.சுதாகர், பட்டாபிராம்.

