/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர கழிவவை தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையோர கழிவவை தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையோர கழிவவை தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையோர கழிவவை தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 27, 2025 02:55 AM

அக்கரை:ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரை இணைக்கும் கே.கே. சாலை, 100 அடி அகலம், 2 கி.மீ., துாரம் கொண்டது.
இதன் குறுக்கே பகிங்ஹாம் கால்வாய் செல்வதால், கட்டுமான கழிவு, குப்பை, வீட்டு பயன்பாட்டு கழிவு கொட்டப்படுகிறது.
வீட்டு உபயோக கழிவை, தொடர்ந்து தீ வைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கண்ணெரிச்சல் ஏற்பட்டு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.
நேற்று காலை, குவிந்திருந்த சோபா மற்றும் துணி கழிவை தீ வைத்து எரித்தனர். அது கொழுந்து விட்டு எரிந்ததால், கே.கே., சாலை முழுதும் புகை மூட்டமாக மாறியது.
தொடர்ந்து தீ வைக்கப்படுவதால், அருகில் வசிப்போர் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
சாலையோரம் கழிவு கொட்டுவதையும், தீ வைப்பதையும் தடுக்க, மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர்.