/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ குடிநீர் பணியால் வாகன ஓட்டிகள் அவதி
/
மெட்ரோ குடிநீர் பணியால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 24, 2025 12:28 AM

ஆவடி, மாநகராட்சியின் மெட்ரோ குடிநீர் பணியால், ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கடந்த மாதம் மின்சார கேபிள் பதிக்கும் பணி நடந்தது. இப்பணியின் போது, ஜெ.பி., எஸ்டேட் அருகே மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வசந்தம் நகர் வரை ஒரு கி.மீ., துாரத்துக்கு குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆவடி மாநகராட்சி ஊழியர்கள், தற்காலிகமாக உடைப்பை சரி செய்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை ஈடுபட்டனர்.
இந்த பணியால், ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, நேற்று மதியம் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லியில் இருந்து ஆவடி செல்லும் மார்க்கத்தில் 2 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆவடி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
***

