/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
60 இடங்களில் உள்வாங்கிய அணுகு சாலை ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
60 இடங்களில் உள்வாங்கிய அணுகு சாலை ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
60 இடங்களில் உள்வாங்கிய அணுகு சாலை ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
60 இடங்களில் உள்வாங்கிய அணுகு சாலை ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஜன 29, 2025 12:10 AM

சோழிங்கநல்லுார், சென்னையின் முக்கிய சாலையாக, பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., உள்ளது. மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து நாவலுார் வரை, 20 கி.மீ., துாரம் உடையது இந்த சாலையில், மெட்ரோ ரயில் பாதை பணி நடந்து வருகிறது.
இதற்காக, ஆறுவழி சாலை நான்கு வழியாக மாற்றப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகம் என்பதால், வாகன ஓட்டிகளின் வசதிக்காக, தடுப்பை அகற்றி அணுகு சாலையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்கள் சென்ற அணுகு சாலையில், மெட்ரோ பணி காரணமாக, கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால், சாலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இச்சாலையில் மின்சாரம், தொலைத்தொடர்பு துறை கேபிள்கள், கழிவுநீர், குடிநீர் குழாய்கள், வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளும் உள்ளன.
கனரக வாகனங்கள் செல்லும்போது, இதன் சிலாப்புகள் சேதமடைகின்றன. அந்த வகையில் கந்தன்சாவடியில் இருந்து நாவலுார் வரை 20 கி.மீ., துாரத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில், சிலாப்புகள் உள்வாங்கி பள்ளம் விழுந்துள்ளது.
இதில் வாகன ஓட்டிகள் சிக்கி காயமடைவதை தவிர்க்க, சில இடங்களில் பகுதிமக்களே குச்சி நட்டு, சிகப்பு துணி சுற்றி எச்சரிக்கை செய்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பள்ளத்தில் சிக்கி விபத்தில் சிக்குகின்றனர்.
சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில் சாலை உள்ளது. ஆனால் மெட்ரோ ரயில் பணியால், அதன் நிர்வாகம் இச்சாலையை கவனிக்கிறது.
சாலை சேதம், பராமரிப்பு பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்பந்தம் பெற்றுள்ள இரு நிறுவனங்கள், முறையாக அப்பணிகளை செய்வதில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலி, உறுப்பு செயலிழப்பு ஏற்படுவதுடன், வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக உள்ளதால், உயர் அதிகாரிகள் தலையிட்டு, சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

