/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாங்குழியான எம்.டி.எச்., சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
பல்லாங்குழியான எம்.டி.எச்., சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பல்லாங்குழியான எம்.டி.எச்., சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பல்லாங்குழியான எம்.டி.எச்., சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 27, 2025 03:05 AM

வில்லிவாக்கம்: தொடர் மழையால் பல்லாங்குழியான எம்.டி.எச்., சாலையில், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஒவ்வொரு பருவமழையின் போது, சென்னையில் பல்வேறு சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், குண்டும் குழியுமாக மாறி வருகின்றன.
அதற்கேற்றபடி, அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம், 95வது வார்டில், எம்.டி.எச்., சாலை உள்ளது. இச்சாலை, பாடி மேம்பாலத்தில் துவங்கி, ஐ.சி.எப்., அருகில் கொன்னுார் நெடுஞ்சாலையில் இணைகிறது.
மொத்தம் 3 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை, பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலேயே இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியான பின், சமீபத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சில நாட்கள் பெய்து வரும் மழையால், இச்சாலையின் சில இடங்களில் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு, பல்லாங்குழியாக மாறிவிட்டது.
பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

