/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எர்ணாவூர் மேம்பாலத்தில் மலை பாம்பு
/
எர்ணாவூர் மேம்பாலத்தில் மலை பாம்பு
ADDED : பிப் 02, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார், திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் மேம்பாலத்தில், நேற்று அதிகாலை ராட்சத மலை பாம்பு ஊர்ந்து சென்றது.
வாகன ஓட்டிகள் எண்ணுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எர்ணாவூர் மேம்பாலத்தில் ஊர்ந்து சென்ற மலை பாம்பை லாவகமாக பிடித்தனர்.
பின், கிண்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக, போலீசாரால் பாம்பு மீட்கப்பட்டதால், வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படாமல் தப்பியது.
எர்ணாவூர் மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகளில் செடிகள் அதிகம் இருப்பதால், அங்கிருந்து மலைபாம்பு வந்திருக்கலாம் என தெரிகிறது.