/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.பி.,
/
கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.பி.,
ADDED : ஆக 02, 2025 12:15 AM
திருக்கழுக்குன்றம், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆன, தனபால் தன் ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 26வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.,வை சேர்ந்த தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தனபால் அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர் வ கித்து வந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, திருக்கழுக்குன்றம் ஒன்றிய நிர்வாகத்திடம் அளித்தார். இக்கடிதத்தை, ஒன்றியக்குழு கூட்டத்தில், நிர்வாகத்தினர் சமர்ப்பித்து, ஊரக வளர்ச்சித்துறை தலைமையிடத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.