/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் எம்.சி.சி., பள்ளி காலிறுதிக்கு தகுதி
/
எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் எம்.சி.சி., பள்ளி காலிறுதிக்கு தகுதி
எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் எம்.சி.சி., பள்ளி காலிறுதிக்கு தகுதி
எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் எம்.சி.சி., பள்ளி காலிறுதிக்கு தகுதி
ADDED : ஜூலை 16, 2025 12:10 AM
சென்னை, எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் போட்டியில், எம்.சி.சி., பள்ளி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
எம்.சி.சி., பள்ளி மற்றும்எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, சேத்துப்பட்டில் நடக்கிறது. இதில், பி.எஸ்.பி.பி., நெல்லை நாடார், சர் முத்தா, டி.ஏ.வி., - டான்போஸ்கோ உள்ளிட்ட, 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவாக பிரிந்து, 'நாக் அவுட' முறையில் மோதுகின்றன.
நேற்று முன்தினம் நடந்த நாக் அவுட் போட்டியில், எம்.சி.சி., பள்ளி மற்றும் அகர்வால் வித்யாலயா பள்ளிகள் மோதின. டாஸ் வென்ற எம்.சி.சி., பள்ளி, பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்கள் நிதானமாக விளையாடி, எட்டு விக்கெட் இழப்புக்கு, 118 ரன்களை அடித்தது.
பின் களமிறங்கிய அகர்வால் வித்யாலயா பள்ளி, எதிர்ப்புற அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 18.4 ஓவர்களில் 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில், எம்.சி.சி., பள்ளி வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதிபெற்றது.
இதே போட்டியின் மற்றொரு 'நாக் அவுட்' ஆட்டத்தில், ஹார்ட் புல்னெஸ் சர்வதேச பள்ளி மற்றும் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராமச்சந்திரா பள்ளி, பந்து வீச்சை தேர்வு செய்தது. மழையால், போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஹார்ட் புல்னெஸ் பள்ளி, 18 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ராமச்சந்திரா பள்ளி, 12.2 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 117 ரன்களை அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

