/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியோர் நல மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., கருவி சேவை துவக்கம்
/
முதியோர் நல மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., கருவி சேவை துவக்கம்
முதியோர் நல மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., கருவி சேவை துவக்கம்
முதியோர் நல மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., கருவி சேவை துவக்கம்
ADDED : ஏப் 24, 2025 12:26 AM
சென்னை, சென்னை கிண்டி கிங் ஆய்வு மைய வளாகத்தில், தேசிய முதியோர் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், தினமும் 100க்கும் மேற்பட்ட முதியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு, முதியோர் வசதிக்காக, 7.75 கோடி ரூபாய் மதிப்பில், எம்.ஆர்.ஐ., கருவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இம்மையத்தை திறந்து வைத்து அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இம்மருத்துவமனை, 2024 பிப் மாதம் துவங்கப்பட்டது. இதுவரை, 2.69 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 7,000க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு, 210 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு வரும் நோயாளிகள், எம்.ஆர்.ஐ., போன்றவற்றிற்கு, அருகில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை பயன்படுத்தி வந்தனர். இனி, முதியோர் எங்கும் செல்ல வேண்டாம்; இங்கேயே பரிசோதனை எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.