/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.டி.சி., சலுகை அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு
/
எம்.டி.சி., சலுகை அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு
ADDED : ஏப் 23, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி.,யில், விருப்பம் போல் பயணிக்கும் வகையிலான, 1,000, 2,000 மதிப்பிலான பயண அட்டை, மாதாந்திர சலுகை பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், விருப்ப பயண அட்டை மாதந்தோறும், 7ம் தேதி முதல் 22ம் தேதி வரையும்; மாதாந்திர பயண அட்டை, 1ம் தேதி முதல் 22 தேதி வரையும் பயணச்சீட்டு விற்பனை மையங்களில் விற்கப்படுகிறது.
இந்நிலையில், ஏப்.,10 முதல் ஏப்.,14 வரை தொடர் விடுமுறை காரணமாக, பயணிகளின் நலன் கருதி, இம்முறை அனைத்து வகை பயண அட்டைகளும் ஏப்., 24 வரை விற்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***

