/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேறும் சகதியுமான சாலை சிந்தாதிரிப்பேட்டையில் அவதி
/
சேறும் சகதியுமான சாலை சிந்தாதிரிப்பேட்டையில் அவதி
ADDED : நவ 05, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட, சிந்தாதிரிப்பேட்டையில் கலவை, தெரு உள்ளது. கடந்த மாதம் குடிநீர் வாரியத்தினர் இந்த சாலையை தோண்டி பாதாள சாக்கடைக்கான பணிகளை மேற்கொண்டனர்.
பணிகள் முடிவடைந்து, மூன்று வாரத்திற்கு மேலாகியும், சாலையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
இதனால் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி, நடந்து செல்வோரும் தவறி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்படும் முன், சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
- மா.தபசு, சிந்தாதிரிப்பேட்டை.