/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முல்லை நகர் கொளத்துார் மினி பஸ் இயக்க கோரிக்கை
/
முல்லை நகர் கொளத்துார் மினி பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:போக்குவரத்து மேலாண் இயக்குநர் பிரபு சங்கரிடம், காங்கிரஸ் 37வது வார்டு கவுன்சிலர் டில்லிபாபு அளித்த மனு:
வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, அம்பேத்கர் கல்லுாரி வழியாக மூலக்கடை, பெரம்பூர் ரயில் நிலையம், செம்பியம், அகரம் உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக செல்ல, கொளத்துார் ஜி.கே.எம்., காலனி வரை போதிய போக்குவரத்து வசதி இல்லை.
இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்ல சிற்றுந்து போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

