/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகையால் நுரையீரல் பாதிப்பு மாநகராட்சி விழிப்புணர்வு
/
புகையால் நுரையீரல் பாதிப்பு மாநகராட்சி விழிப்புணர்வு
புகையால் நுரையீரல் பாதிப்பு மாநகராட்சி விழிப்புணர்வு
புகையால் நுரையீரல் பாதிப்பு மாநகராட்சி விழிப்புணர்வு
ADDED : ஜன 05, 2024 12:50 AM
சென்னை, சென்னை, தி.நகர், ஆர்.கே.எம்.சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'புகையில்லா போகி' பண்டிகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் சீனிவாசன் கூறியதாவது:
போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவற்றை எரிப்பதால், காற்று மாசு ஏற்படுவதுடன், அடர்ந்த புகையால் நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஒருமுறை உபயோகித்து துாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள், பள்ளி, வீடுகள் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.