/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு நகராட்சி தலைவர் கடிதம்
/
திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு நகராட்சி தலைவர் கடிதம்
திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு நகராட்சி தலைவர் கடிதம்
திருவள்ளூரில் 4வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு நகராட்சி தலைவர் கடிதம்
ADDED : மார் 19, 2025 12:34 AM
சென்னை, திருவள்ளூரில் நான்காவது புதிய ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை புறநகரில் முக்கிய நகரமாகவும், மாவட்ட தலைநகரமாகவும் திருவள்ளூர் உள்ளது. இங்கிருந்து தினமும் பல ஆயிரகணக்கானோர், இருங்கட்டுக்கோட்டை தொழிற்பேட்டை, வல்லம் தொழிற்பேட்டை, ஒரகடம் தொழிற்பேட்டை, காக்களூர் தொழிற்பேட்டை பகுதி மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தொழிற்பேட்டைக்கு சென்று வேலை செய்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் அரக்கோணம், ஆவடி, அம்பத்துார் போன்ற முக்கிய ரயில் நிலையங்கள் இருக்கின்றன. சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பெரம்பூரில் நான்காவது புதிய ரயில் முனையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரம்பூரில் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்தால், அங்கிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில் பாதைகளை கடந்து சென்று பிரதான எக்ஸ்பிரஸ் பாதையை அடைய வேண்டும். இதனால், புறநகர் ரயில்கள் தாமதமாவதோடு, பயணிகள் சேவைக்கு பெரும் இடையூறு ஏற்படும்.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து 42 கி.மீ., துாரத்தில் உள்ள திருவள்ளூரில் புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வே பரிந்துரை செய்ய வேண்டும்.
இங்கு போதிய நிலம் இருப்பதோடு, இதற்கான அனைத்து வசதியும் உள்ளன. அருகில் உள்ள தொழில்துறை மையங்கள் மற்றும் புதிய சர்வதேச விமான நிலையமும் அமைய உள்ளதால், பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இந்த வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், இங்குள்ள பயணியர் சென்ட்ரல் வந்து விரைவு ரயில்களில் பயணம் செய்வதை தவிர்க்க முடியும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
***