/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
/
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாந்கராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
ADDED : மே 10, 2025 12:19 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 2.40 கோடி ரூபாய் செலவில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.
இப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், நேற்று நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கோதண்டம் நகரில், 8 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
காமராஜர் நகரில், 29 லட்சத்தில் மழைநீர் கால்வாய், ரகு நகரில் 10 லட்சத்தில் மழைநீர் கால்வாய், கீழ்கட்டளையில் 10 லட்சத்தில் குழந்தைகள் வளர்ச்சி மைய புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஏ.ஜி.எஸ்., நகரில், 9.90 லட்சத்தில் மழைநீர் கால்வாய் பணிகளையும் ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.