/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி கால்பந்து போட்டி ஒன்பது அணிகள் பலப்பரீட்சை
/
மாநகராட்சி கால்பந்து போட்டி ஒன்பது அணிகள் பலப்பரீட்சை
மாநகராட்சி கால்பந்து போட்டி ஒன்பது அணிகள் பலப்பரீட்சை
மாநகராட்சி கால்பந்து போட்டி ஒன்பது அணிகள் பலப்பரீட்சை
ADDED : மார் 13, 2025 11:57 PM
சென்னை, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நகரின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
போட்டியில், 74 கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 2,416 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று காலை, ஆண்களுக்கான கால்பந்து போட்டி, சென்ட்ரல் அருகில் உள்ள கண்ணப்பர் திடலில் நடந்தது.
இதில், சி.சிஓ.ஏ., 'ஏ' மற்றும் 'பி', மண்டலம் - 7, கவுன்சில், எஸ்.ஏ., 'ஏ' மற்றும் 'பி', மண்டலம் - 2, பி.எச்.டி., உள்ளிட்ட ஒன்பது அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர்ந்து, இன்று காலை கண்ணப்பர் திடலில், டென்னிகாய்ட், எறிபந்து, கோ - கோ போட்டிகளும், நாளை மந்தைவெளி அல்போன்சா திடலில் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளும் நடக்கின்றன.
தொடர்ந்து, இம்மாதம் 25ம் தேதி வரை, பல்வேறு இடங்களில் போட்டிகள் நடக்கின்றன.