/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர் கொலை? நண்பர்களிடம் விசாரணை
/
வாலிபர் கொலை? நண்பர்களிடம் விசாரணை
ADDED : ஜன 02, 2025 12:37 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பயன்பாடில்லாத கட்டடம் அருகே, நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். விசாரணையில், எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், 24, என்பதும், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியதும் தெரியவந்தது.
மது போதையில் கட்டடத்தின் மீது இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இறந்தவரின் உடலில் காயங்கள் உள்ளதால், சந்தேக மரணம் என வழக்கு பதிந்து, விக்னேஷின் நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.