/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆழ்வார்பேட்டையில் இசை விழா துவக்கம்
/
ஆழ்வார்பேட்டையில் இசை விழா துவக்கம்
ADDED : டிச 20, 2024 12:26 AM

சென்னை, டதி இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின், 92வது தென்னிந்திய இசை திருவிழாவின் துவக்க விழா, ஆழ்வார்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்வில், 'சங்கீதகலாசிகாமணி' விருதை, நெய்வேலி சந்தானகோபாலனுக்கு, ரசிக பிரியா பைன் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ராமகிருஷ்ணன் வழங்கினார்.
'நாட்டிய கலாசிகாமணி' விருதை, ஜெயஸ்ரீ ராஜகோபாலனுக்கு, தி இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி தலைவர் ராமசந்திரன் வழங்கினார்.
'டாக்டர் உமையாள்புரம் கே சிவராமன்' விருதை, மிருதங்க வித்வான் தஞ்சாவூர் குமாருக்கும், ஜி.என்.பி., விருது லட்சுமி ரங்கராஜனுக்கும் வழங்கப்பட்டது.
'நாடக கலாசிகாமணி' விருது காந்தனுக்கும், கர்நாடக இசையில் சிறந்து விளங்குபவருக்கான விருதை, சரஸ்வதி விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், கிளீவ்லாண்ட் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில், 73ம் ஆண்டு மார்கழி கலை விழா, நேற்று முன்தினம் துவங்கியது. ஜன., 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
துவக்க விழாவில், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன், 'சங்கீத கலா நிபுணா' விருதை, கர்நாடகஇசை பாடகி சவுமியாவிற்கும், 'ந்ரித்ய கலா நிபுணா' விருதை, நடன கலைஞர் பத்மினி கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கினார்.