ADDED : ஜன 05, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில், 'ஏ' பிளாக்கில், ஏழாவது தளத்தில் உள்ள அரங்கத்தில், காவேரி மார்கழி இசை திருவிழா நடைபெற உள்ளது.
வரும், 6 முதல் 10ம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
இசையின் குணமளிக்கும் ஆற்றலை, பரவலான சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கர்நாடக கலைஞர்கள் ரித்விக் ராஜா, வசுதா ரவி, விஸ்வாஸ் ஹரி, வி.கே.மணிமாறன், சுசித்ரா பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அதேநேரம், சிற்றுண்டி வழங்கப்படும். முன்பதிவுக்கு 044 - 4000 6000 என்ற எண்ணை அழைக்கலாம்.
- நமது நிருபர் -

