/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலிபுதுநகரில் முஸ்லிம்கள் உண்ணாவிரதம்
/
மணலிபுதுநகரில் முஸ்லிம்கள் உண்ணாவிரதம்
ADDED : பிப் 09, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலிபுதுநகர்:மணலிபுதுநகர், 55வது பிளாக் பகுதியில், முஸ்லிம் ஜமாத் கமிட்டி - மஸ்ஜித் - ஏ- ஹபிபியா பள்ளி வாசல், 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தனிப்பட்ட சொத்தான, முஸ்லிம் ஜமாத் கமிட்டியை, தமிழ்நாடு வக்பு வாரியத்தில், இணைக்க தொடர்ந்து வலியுறுத்தும், தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகத்தை கண்டித்து, பள்ளி வாசல் அருகே, நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
இதில், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதில், வக்பு செய்யாத சொத்தை வாரியத்தில் இணைக்க வலியுறுத்தக் கூடாது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பின், மாலையில் உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்பட்டது.

