/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
64 நாள் கடலில் தத்தளித்த மியான்மர் நாட்டவர் மீட்பு
/
64 நாள் கடலில் தத்தளித்த மியான்மர் நாட்டவர் மீட்பு
64 நாள் கடலில் தத்தளித்த மியான்மர் நாட்டவர் மீட்பு
64 நாள் கடலில் தத்தளித்த மியான்மர் நாட்டவர் மீட்பு
ADDED : டிச 30, 2024 01:24 AM

காசிமேடு: காசிமேடைச் சேர்ந்தவர் வினோத்; இவருக்கு சொந்தமான விசைப்படகில், ஏழு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
மாமல்லபுரம் அருகே கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மூங்கில் படகு ஒன்று மிதந்து வந்தது. அதில் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு சைகை காட்டி, கொடி அசைத்துள்ளார்.
இதையடுத்து, விசைப்படகு ஓட்டுனர் லோகு அருகில் சென்று பார்த்தபோது, கையெடுத்து கும்பிட்டு, '64 நாட்களாக தத்தளிப்பதாகவும் காப்பாற்றுமாறும்' கூறினார்.
காசிமேடு மீன்வர்கள், அவரது மூங்கில் படகை தங்களது விசைப்படகில் கட்டி, அவரை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.விசாரணையில், அவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஷான்மா மா, 37, என்பதும், அவரிடம் சாப்பிடுவதற்கு பன் ரொட்டி இருந்ததும் தெரிந்தது. காற்றின் வேகத்தில் திசை மாறி வந்தாரா என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

