/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிட்டப்பார்வை விழிப்புணர்வு ஜன., 4ல் அகர்வால்ஸ் மாநாடு
/
கிட்டப்பார்வை விழிப்புணர்வு ஜன., 4ல் அகர்வால்ஸ் மாநாடு
கிட்டப்பார்வை விழிப்புணர்வு ஜன., 4ல் அகர்வால்ஸ் மாநாடு
கிட்டப்பார்வை விழிப்புணர்வு ஜன., 4ல் அகர்வால்ஸ் மாநாடு
ADDED : டிச 24, 2024 12:46 AM

சென்னை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், கிட்டப்பார்வை மற்றும் டிஜிட்டல் கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாடு, வரும் ஜன., 4ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதில் நோயாளிகள் பங்கேற்பதற்கான இணையதள பதிவு முறையை, அம்மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறியதாவது:
டிவி, கணினி, மொபைல் போன் உள்ளிட்ட திரைகள் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு, கிட்டபார்வை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
அவ்வாறு பாதிக்கப்படுவோர், கிட்டபார்வை பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர், https://www.dragarwal.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மேலும், 95949 01868 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். கிட்டபார்வை மற்றும் டிஜிட்டல் கண்ணயற்சி ஆகியவை சமாளிப்பதற்கான உத்திகள், கண் சிகிச்சையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கண் சிகிச்சை நிபுணர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.