/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீச்சல் குளத்தில் வாலிபர் மர்ம மரணம்
/
நீச்சல் குளத்தில் வாலிபர் மர்ம மரணம்
ADDED : நவ 10, 2025 01:36 AM
புதுவண்ணாரப்பேட்டை: நீச்சல் குளத்திற்கு சென்ற வாலிபர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வியாசர்பாடி, கருணாநிதி நகர் 11வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பிலிப், 22; தனியார் நிறுவன ஊழியர். நேற்று கிரிக்கெட் விளையாடிய பின், புதுவண்ணாரப்பேட்டை, இளைய முதலி தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க வந்துள்ளார்.
அப்போது, நீச்சல் குளத்தின் படிக்கட்டில் இறங்கும்போது, பிலிப் தவறி விழுந்ததாகவும், மூச்சு பேச்சின்றி கிடந்ததாகவும் கூறப்படுகிறது. பிலிப்பை மீட்ட நண்பர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

