/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதை ரயில் நிலையத்தில் மூதாட்டி மர்ம மரணம்
/
சைதை ரயில் நிலையத்தில் மூதாட்டி மர்ம மரணம்
ADDED : டிச 21, 2024 11:54 PM
சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலைய முதல் நடைமேடையில், நேற்று காலையில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் உடலை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், புழல் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 65, என்பதும், ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், 'உயிரிழந்த மூதாட்டியின் உடலில் எந்த காயங்களும் இல்லை. மூதாட்டி ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இயற்கையாகவே மரணம் அடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும். சந்தேகத்தின்படி, அதே நடைமேடையில் இருந்த முத்து, 38, என்ற மாற்றுத்திறனாளியிடம் விசாரித்து வருகிறோம்' என்றனர்.