ADDED : செப் 30, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, புரசைவாக்கத்தில், தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புரசைவாக்கம், வடமலை தெருவைச் சேர்ந்தவர் குலாப் சந்த், 30. அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், 'ஆர்டர்' எடுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 'டிவி'யில் கிரிக்கெட் போட்டி பார்த்துவிட்டு உறங்கினார்.
நேற்று காலை 9:30 மணிக்கு, அவரது அண்ணன் அசோக் எழுப்பியபோது, எந்தவித அசைவும் இன்றி கிடந்துள்ளார். உடனே, '108' ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்துள்ளார்.
அதில் வந்த மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனை செய்ததில், குலாப்சந்த் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வேப்பேரி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.