/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு, அலுவலகத்தில் மர்ம நபர் கைவரிசை
/
வீடு, அலுவலகத்தில் மர்ம நபர் கைவரிசை
ADDED : ஜன 01, 2025 12:54 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி, கருணாநிதி சாலை முதல் தெருவை சேர்ந்தவர் டேனியல், 49; பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், வீட்டின் கீழ் பகுதியில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 1:00 மணி அளவில் மாடியில் சத்தம் கேட்டது. உடனடியாக டேனியல் மாடிக்கு சென்று பார்த்த போது, இரண்டு பேர் தப்பித்து ஓடினர்.
மேலும் முதல் மாடியில் இருந்த இரண்டு பீரோக்களை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்தது தெரிந்தது. தப்பித்து ஓடும் போது, டேனியலின் மொபைல்போனை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து டேனியல்செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
பெரம்பூர் முனியப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன், 58; எல்.ஐ.சி., ஏஜென்ட். வீட்டின் அருகே இவரது அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை அலுவலகத்தை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, மேஜையில் வைத்திருந்த 5,000 ரூபாய் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து தீனதயாளன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

