/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் நளினி, நந்தினி
/
டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் நளினி, நந்தினி
ADDED : அக் 06, 2024 12:13 AM
சென்னை, தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் ஆதரவுடன், காவேரி மருத்துவமனை சார்பில், 6ம் ஆண்டு, மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள், பெரம்பூர், ஐ.சி.எப்., உள் விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் துவங்கின. மாநிலம் முழுதும் இருந்து, 850 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், நளினி, ஷர்வானி, நந்தினி, ஏகந்திகா, அனன்யா, ஜியா பண்டாரி, ஸ்ரீயா, பிரீத்தி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
நேற்று நடந்த விறுவிறுப்பான காலிறுதி போட்டியில், நளினி, நந்தினி, அனன்யா மற்றும் ஸ்ரீயா ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர். இதே வயதிற்கான ஆண்கள் பிரிவில், அபிநந்த், மணிகண்டன், பாலமுருகன் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோர், அரையிறுதிக்கு முன்னேறினர்.